சுருக்கமான தகவல்
இணையம் இல்லாத உலகத்தைக் கற்பனைகூட் செய்துப்பார்க்க முடியாது, அதே போன்றுதான் உலாவி இல்லாத இணையத்தையும் நினைத்துப் பார்க்கவே முடியாது, ஏனென்றால் இணையத்தை அணுகுவது, ஷாப்பிங் செய்வது, டிக்கெட் புக் செய்வது என இணையத்தில் எது நடந்தாலும் உலாவியின் வழியாகத்தான் செய்தாக வேண்டும்.
இன்றைய உலகில், மக்களை தொடர்புகொள்ளச் செய்வது முதல், மளிகைப் பொருட்களை வாங்குவது, கட்டணங்களைச் செலுத்துவது, வங்கி பரிவர்த்தனைகள் செய்வது என எல்லாமும் ஆஃப்லைனில் நடப்பதைக் காட்டிலும் ஆன்லைனிலேயே நடப்பதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
இப்படி எல்லாமும் உலாவியிலேயே இணையத்தின் வழியாக அணுகப்படும்போது, உலாவியைப் பாதுகாப்பது உண்மையிலேயே ஒரு முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது என்பதால்தான் உலாவி பாதுகாப்பு என்பதே உருவாகியுள்ளது. இது, பயனருடைய ஆன்லைன் செயல்பாடுகளின் இரகசியத்தன்மை, நேர்மை மற்றும் அணுகல் தன்மை ஆகியவற்றைச் சீர்குலைக்கக்கூடிய பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து இணைய உலாவியையும், அது இயங்கும் சாதனங்களையும் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
பல்வேறு உலாவிகள் இருந்தாலும், மைக்ரோசாஃப்ட் எட்ஜ், மொஸில்லா பயர்பாக்ஸ், கூகுள் குரோம், சஃபாரி போன்ற சில உலாவிகள் மட்டுமே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.