இ-வாலட்டின் பாதுகாப்பான பயன்பாடு
மின்னணு-வாலட் (இ-வாலட்) என்பது ஒரு மின்னணு பயன்பாட்டு மென்பொருள் ஆகும், இதில் பயனர் நாணயத்தை முன்பே லோடு செய்கிறார். இவை பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் வாலட்டுகளைக் காட்டிலும் வசதியாக இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, இதனைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குதல், பயன்பாட்டு வசதி பில்களை செலுத்துதல் போன்ற இணையவழி ஈ-காமர்ஸ் பரிவர்த்தனைகளை செய்யலாம். இந்த இ-வாலட்டுகளின் ஏராளமானவை "செயலிகள்" மூலம் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு இணையத்தில் கிடைக்கின்றன, இவை விற்பனைப் பரிமாற்றங்கள் மற்றும் தனிநபர்களிடையே பியர்-டு-பியர் பரிவர்த்தனைகளை ஆதரிக்கின்றன.
இ-வாலட்டைப் பயன்படுத்தும்போது அதை எப்படி பயன்படுத்த வேண்டும், அவற்றின் அச்சுறுத்தல்கள் என்ன மற்றும் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பான இணைய நடைமுறைகள் குறித்து டிஜிட்டல் பயனர்கள் அறிந்திருப்பது அவசியம்.