கடன் மோசடிகள்/ஏமாற்று வேலைகள் என்பது பொதுவாக இணையம் அல்லது பிற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, செலுத்த வேண்டிய வட்டி விகிதங்களை மறைத்து அல்லது பயனரின் முக்கியமான நிதித் தரவைத் திருடும் நோக்கில் ஏதேனும் டிஜிட்டல் பயனருக்கு கடன் வழங்கும் செயலைக் குறிக்கிறது.

இதில் போலியான இணையதளங்கள் அல்லது சமூக ஊடக சுயவிவரங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுதல் அல்லது மால்வேரைப் பயன்படுத்தி ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி பின்னர் அவற்றை வைத்து வேறொருவரின் பெயரில் கடன் பெற பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.