டாக்ஸிங் என்பது உங்கள் முகவரி, தொலைபேசி எண் போன்ற உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பிறரால் இணையத்தில் வெளியிடப்பட்டு, இந்தத் தகவலைப் பயன்படுத்தி உங்களைத் துன்புறுத்த இணைய உறுப்பினர்களை வெளிப்படையாக அழைக்கும் செயல் ஆகும்.

நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

இந்தக் குற்றத்தில் ஒரு தனிநபரின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களுக்கு எதிராக சில தவறான குற்றச்சாட்டுகளுடன் பகிரங்கப்படுத்தப்படுகின்றன, பாதிக்கப்பட்டவரை இணையத்தில் துன்புறுத்த இது மற்றவர்களைத் தூண்டுகின்றன. மேலும் இது அவர்களின் தனியுரிமையில் ஊடுருவி, அவமானகரமான மற்றும் வேதனையான அனுபவத்தின் மூலம் சமூக இழிவை ஏற்படுத்துகிறது.