உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுதல் (KYC) என்பது பல்வேறு வணிகங்கள்/வாடிக்கையாளர்கள் புதிதாக சேரும் போதும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களிடத்து குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மேற்கொள்ளப்படும் அடையாள சரிபார்ப்பு செயல்முறையாகும்.

KYC ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

KYC இன் முக்கிய நோக்கம் என்னவென்றால், அடையாள திருட்டு, பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது, பணமோசடி மற்றும் நிதி மோசடி ஆகியவற்றைத் தடுப்பதற்காகும். KYC செயல்முறையானது நிதி நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் வாடிக்கையாளரை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது. RBI விதிமுறைகளின்படி, KYC கட்டாயத் தேவையாகிவிட்டது.

KYC செயல்முறையை நிறைவு செய்ய வாடிக்கையாளர்களிடமிருந்து பின்வரும் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

  • சட்டப்பூர்வ பெயர்
  • அடையாளச் சான்று
  • அடையாளச் சான்றிதழின்படி சரியான நிரந்தர முகவரி
  • நிறுவனம் அல்லது நபரின் சட்டப்பூர்வ நிலை.

KYC மோசடிகள்

இந்த விதியை மோசடி செய்பவர்கள் அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்க, வங்கி பிரதிநிதி போல் பாவனை செய்து, போலி எஸ்எம்எஸ் / குறுஞ்செய்தியை அனுப்புகின்றனர் அல்லது மோசடி அழைப்புகளை மேற்கொள்கின்றனர். மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்று இணைப்பு (ஃபிஷிங் லிங்க்) அல்லது 10 இலக்க மொபைல் எண்ணை வழங்கலாம் அல்லது டிஜிட்டல் சாதனத்துக்கான அணுகலை வழங்கும்படி வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தலாம், இதன் மூலம் வாடிக்கையாளரின் தனிப்பட்ட விவரங்களைக் கைப்பற்றி, பணத்தைத் திருடுவதற்கு அவர்களின் வங்கிக் கணக்குகளின் அங்கீகாரமற்ற அணுகலைப் பெற திட்டமிடுகிறார்கள்.

சமீப காலமாக பல அப்பாவிகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இந்த மோசடியால் இழந்துள்ளனர், இன்னும் இழந்து வருகின்றனர்.