துவக்கவுரை
விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, வைரஸ் தாக்குதல்களைத் தவிர்க்க மென்பொருளை அவ்வப்போது புதுப்பிக்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்துகிறோம். போலி தொழில்நுட்ப ஆதரவை அழைக்கச் செய்து பயனர்களை ஏமாற்ற மோசடி செய்பவர்கள் புத்திசாலித்தனமான திட்டங்களைக் கைவசம் கொண்டுள்ளனர். சந்தையில் பிரபலமான ஆன்டி-வைரஸ் அல்லது ஆன்டி-மால்வேர் தயாரிப்புகளில் ஒன்றைப் பதிவிறக்க விரும்பினால், கிளிக் செய்வதற்கு முன் கவனமாக இருங்கள். ஒரு புதிய வகை மோசடி உள்ளது, அதைப் பற்றி பெரும்பாலான இணைய பயனர்களுக்குத் தெரிவதில்லை. இது தொழில்நுட்ப ஆதரவு மோசடி என்று அழைக்கப்படுகிறது.
தொழில்நுட்ப ஆதரவு மோசடி தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது, மேலும் இது அதிநவீனமாகியும் வருகிறது. குற்றவாளிகள், அதாவது தாக்குதல்காரர்கள் வாடிக்கையாளர்கள், செக்யூரிட்டி அல்லது தொழில்நுட்ப ஆதரவு பிரதிநிதிகள் போன்றோராக போலியாக அவதாரம் எடுக்கும்போது இந்த மோசடி நிகழ்கிறது. போலி அழைப்பு மையங்கள், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட கணினிகளில் (பிசி) சிக்கல்கள் இருப்பதாகவும் உடனடி தொழில்நுட்ப ஆதரவு தேவை என்றும் எச்சரிக்கைகளை அனுப்புகின்றன. அவர்கள் மின்னஞ்சல் அல்லது வங்கி கணக்கு அல்லது மென்பொருள் உரிமத்தை புதுப்பித்தல் ஆகியவை தொடர்பாகவும் உதவி வழங்குவதாக பயனர்களை ஏமாற்றலாம். ஆனால் உண்மையில் தொழில்நுட்ப ஆதரவு மோசடி செய்பவர்கள் பயனர்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் விலையுயர்ந்த தொழில்நுட்ப சேவைகளை விற்கிறார்கள். மேலும் சாதனங்களுக்கு தொலைநிலை அணுகலை வழங்குமாறு மக்களை நம்ப வைக்கவும் அவர்கள் முயற்சிக்கின்றனர், இதன் மூலம் மோசடிக்காரர்கள் பயனர்களின் தரவினுடைய அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற முடியும்.